Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 299

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை

Thalam
அங்கதாளம் (5 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

(எடுப்பு - அதீதம்)தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2தனத்ததன தனதான தனத்ததன தனதானதனத்ததன தனதானதனதான

Lyrics

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரைமயக்கியிடு மடவார்கள்மயலாலே

மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகிவயிற்றிலெரி மிக்முளஅதனாலே

ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகிஒருத்தர்தமை மிகநாடியவரோடே

உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாடஉயர்ச்சிபெறு குணசீலமருள்வாயே

விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலைமிகுத்தபல முடனோதமகிழ்வோனே

வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீளவிளைத்ததொரு தமிழ்பாடுபுலவோனே

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோதுதிருக்கையினில் வடிவேலையுடையோனே

திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகானதிருத்தணிகை மலைமேவுபெருமாளே.

All songs →