Song 297
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
- Sthalam
- திருத்தணிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தந் தனதன தந்தந் தனதனதந்தந் தனதனதனதான
Lyrics
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரைவந்துந் தியதிருமதனாலே
வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுறவஞ்சம் பதும்விடுமதனாலே
பங்கம் படுமென் தங்கந் தனிலுதிபண்பொன் றியவொருகொடியான
பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்பொன்றுந் தனிமையைநினையாயோ
தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்சென்றொன் றியபொழிலதனுடே
தெந்தெந் தெனதென என்றண் டுறஅளிநின்றுந் திகழ்வொடுமயிலாடப்
பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள்என்றும் புகழ்பெறமலாணனும்
பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவியென்றுஞ் செயவலபெருமாளே.
