Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 291

முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தன தத்தன தனதன தனதனதனத்தன தத்தன தனதன தனதனதனத்தன தத்தன தனதன தனதனதனதான

Lyrics

முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில்விதமாக

முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலிபுழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்முயக்கம டுத்துழி தருமடி யவனிடர்ஒழிவாக

மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவணபுயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிகவிசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும்வடிவேலும்

வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலறதிருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலிவிதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொருளருளாயோ

புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபடநகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள்பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவளபிராமி

பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதிஎழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகைபொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள்அமுதாகச்

செகத்தைய கத்திடு நெடியவர் கடையவள்அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதிதிறத்தமி ழைத்தரு பழையவ ளருளியசிறியோனே

செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுளகரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணிதிருத்தணி பொற்பதி தனில்மயில் நடவியபெருமாளே.

All songs →