Song 277
நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
- Sthalam
- திருத்தணிகை
- Raagam
- செஞ்சுருட்டி/ஸஹானா
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (6 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2தனதான தனத்தன தான தனதான தனத்தன தானதனதான தனத்தன தானதனதான
Lyrics
நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கிநிசமான தெனப்பல பேசியதனுடே
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகிநினைவால்நி னடித்தொழில் பேணிதுதியாமல்
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகிசலமான பயித்திய மாகிதடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதிதலைமீதில் பிழைத்திட வேநினருள்தாராய்
கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோதகவினாரு புயத்திலு லாவிவிளையாடிக்
களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவைகடனாகு மிதுக்கன மாகுமுருகோனே
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறிபடிமீது துதித்துடன் வாழஅருள்வாயே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறுபவரோக வயித்திய நாதபெருமாளே.
