Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 271

சொரியு முகிலைப் பதும நிதியைச்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தனனத் தனன தனனத்தனன தனனத்தனதான

Lyrics

சொரியு முகிலைப் பதும நிதியைச்சுரபி தருவைச்சமமாகச்

சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்சுமட ரருகுற்றியல்வாணர்

தெரியு மருமைப் பழைய மொழியைத்திருடி நெருடிக்கவிபாடித்

திரியு மருள்விட் டுனது குவளைச்சிகரி பகரப்பெறுவேனோ

கரிய புருவச் சிலையும் வளையக்கடையில் விடமெத்தியநீலக்

கடிய கணைபட் டுருவ வெருவிக்கலைகள் பலபட்டனகானிற்

குரிய குமரிக் கபய மெனநெக்குபய சரணத்தினில்வீழா

உழையின் மகளைத் தழுவ மயலுற்றுருக முருகப்பெருமாளே.

All songs →