Song 265
குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
- Sthalam
- திருத்தணிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத்தனதான
Lyrics
குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்குடையிட் டகுறைப்பிறையாலே
குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்குயிலுக் குமினித்தளராதே
இவளைத் துவளக் கலவிக் குநயக்திறுகத் தழுவிப்புயமீதெ
இணையற் றழகிற் புனையக் கருணைக்கினிமைத் தொடையைத்தரவேணும்
கவளக் கரடக் கரியெட் டலறக்கனகக் கிரியைப்பொரும்வேலா
கருதிச் செயலைப் புயனுக் குருகிக்கலவிக் கணயத்தெழுமார்பா
பவளத் தரளத் திரளக் குவைவெற்பவையொப் புவயற்புறமீதே
பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்பதியிற் குமரப்பெருமாளே.
