Song 252
ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர
- Sthalam
- திருத்தணிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தத்தன தத்தன தத்தனதான தத்தன தத்தன தத்தனதான தத்தன தத்தன தத்தனதனதான
Lyrics
ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திரரூப மொத்தநி றத்திகள் விற்கணையோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரையமுதோடே
ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குரலோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள்ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள்மணம்வீசும்
மாலை யிட்டக ழுத்திகள் முத்தணிவார ழுத்துத னத்திகள் குத்திரமால்வி ளைத்தும னத்தைய ழித்திடுமடமாதர்
மார்ப சைத்தும ருட்டியி ருட்டறைவாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடுமாத ருக்குவ ருத்தமி ருப்பதுதணியாதோ
வேலை வற்றிட நற்கணை தொட்டலைமீத டைத்துத னிப்படை விட்டுறவீற ரக்கன்மு டித்தலை பத்தையுமலைபோலே
மீத றுத்திநி லத்தில டித்துமெய்வேத லக்ஷுமி யைச்சிறை விட்டருள்வீர அச்சுத னுக்குந லற்புதமருகோனே
நீலி நிட்களி நிர்க்குணி நித்திலவாரி முத்துந கைக்கொடி சித்திரநீல ரத்தின மிட்டஅ றக்கிளிபுதல்வோனே
நீற திட்டுநி னைப்பவர் புத்தியில்நேச மெத்தஅ ளித்தருள் சற்குருநீல முற்றதி ருத்தணி வெற்புறைபெருமாளே.
