Song 249
எனக்கென யாவும் படைத்திட நாளும்
- Sthalam
- திருத்தணிகை
- Raagam
- மாயாமாளவகெளளை
- Thalam
- ஆதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம்தனதான
Lyrics
எனக்கென யாவும் படைத்திட நாளும்இளைப்பொடு காலந்தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்இலச்சையி லாதென்பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்உரைத்திடு வார்தங்குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்பொலச்சர ணானுந்தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்விழக்கொடு வேள்கொன்றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்விருப்புற வேதம்புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்சிரத்தினை மாறும்முருகோனே
தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்திருத்தணி மேவும்பெருமாளே.
