Song 246
உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
- Sthalam
- திருத்தணிகை
- Raagam
- லலிதா
- Thalam
- கண்டசாபு (2 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தக-1தய்யனா தத்ததன தய்யனா தத்ததனதய்யனா தத்ததனதனதான
Lyrics
உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுதுமுள்ளவே தத்துறைகொடுணர்வோதி
உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளையுள்ளமோ கத்தருளியுறவாகி
வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழையவல்லமீ துற்பலசயிலமேவும்
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறிகிள்ளிவீ சுற்றுமலர்பணிவேனோ
பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவிதுய்யவே ணிப்பகிரதிகுமாரா
பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுதுநெய்யனே சுற்றியகுறவர்கோவே
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடுகையமால் வைத்ததிருமருகோனே
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவதெய்வயா னைக்கினியபெருமாளே.
