Song 224
நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து
- Sthalam
- சுவாமி மலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தான தந்த தனதன தான தந்ததனதன தான தந்ததனதான
Lyrics
நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்துநிறைகுழல் மீத ணிந்துகுழைதாவும்
நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்நினைவற வேமொ ழிந்துமதனுலின்
கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்துகனியித ழேய ருந்தியநுராகக்
கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்குகபடனை யாள வுன்றனருள்கூராய்
உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்குமுயர்கயி லாய மும்பொன்வரைதானும்
உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்றஉமையரு ளால்வ ளர்ந்தகுமரேசா
குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்தகுமரக டோ ர வெங்கண்மயில்வாழ்வே
கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்தகுருமலை மீத மர்ந்தபெருமாளே.
