Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 208

கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்

Thalam
திஸ்ர்ருபகம் (5)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனாதனன தானம் தனாதனன தானம்தனாதனன தானம்தனதான

Lyrics

கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்கடாவினிக ராகுஞ்சமனாருங்

கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்கனாவில்விளை யாடுங்கதைபோலும்

இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்கிராமலுயிர் கோலிங்கிதமாகும்

இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்றியானுமுனை யோதும்படிபாராய்

விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்வியாகரண ஈசன்பெருவாழ்வே

விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்விநாசமுற வேலங்கெறிவோனே

தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்சுவாசமது தானைம்புலனோடுஞ்

சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்சுவாமிமலை வாழும்பெருமாளே.

All songs →