Song 206
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
- Sthalam
- சுவாமி மலை
- Raagam
- அடாணா
- Thalam
- அங்கதாளம் (5 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2தனதன தனந்த தான தனதன தனந்த தானதனதன தனந்த தானதனதான
Lyrics
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயினிருவினை யிடைந்து போகமல்முட
விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேதமிலையென இரண்டு பேருமழகான
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்பணியவிண் மடந்தை பாதமலர்தூவப்
பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாடபருமயி லுடன்கு லாவிவரவேணும்
அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்அடியென விளங்கி யாடுநடராஜன்
அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்அயலணி சிவன்பு ராரியருள்சேயே
மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவிமறலியுண வென்ற வேலையுடையோனே
வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமிமலைமிசை விளங்கு தேவர்பெருமாளே.
