Song 195
வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்ததனதான
Lyrics
வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டுவயிறில்நெடு நாள லைந்துபுவிமீதே
மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்துவயதுபதி னாறு சென்றுவடிவாகிக்
கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்றுகனிவதுட னேய ணைந்துபொருள்தேடிக்
கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்தகசடனெனை யாள வுன்றனருள்தாராய்
புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்தபுதல்வியித ழூற லுண்டபுலவோனே
பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்தபுதியமயி லேறு கந்தவடிவேலா
பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டிபரமகலி யாணி தந்தபெருவாழ்வே
பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்றுபழநிமலை மீதி னின்றபெருமாளே.
