Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 157

சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தனனதன தத்தத் தனத்ததனதனதனன தனனதன தத்தத் தனத்ததனதனதனன தனனதன தத்தத் தனத்ததனதனதான

Lyrics

சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையுமொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடிசிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனியணுகாதே

சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடுசுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலையொழியாதே

மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடிஉடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவதுமொருநாளே

வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிடஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசையமனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபதமருள்வாயே

நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடுசிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையினளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவுமயிலேறி

நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழலஅகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவருமுருகோனே

குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிருகுவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயுமணவாளா

குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெறஅறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினியகுருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழுபெருமாளே.

All songs →