Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 151

கொந்துத் தருகுழ லிருளோ புயலோ

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தந்தத் தனதன தனனா தனனாதந்தத் தனதன தனனா தனனாதந்தத் தனதன தனனா தனனாதனதான

Lyrics

கொந்துத் தருகுழ லிருளோ புயலோவிந்தைத் தருநுதல் சிலையோ பிறையோகொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோவிழிவேலோ

கொங்கைக் குடமிரு கரியோ கிரியோவஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோகொங்குற் றுயரல்கு லரவோ ரதமோஎனுமாதர்

திந்தித் திமிதிமி திமிதா திமிதோதந்தித் திரிகட கிடதா எனவேசிந்திப் படிபயில் நடமா டியபாவிகள்பாலே

சிந்தைத் தயவுகள் புரிவே னுனையேவந்தித் தருள்தரு மிருசே வடியேசிந்தித் திடமிகு மறையா கியசீரருள்வாயே

வெந்திப் புடன்வரு மவுணே சனையேதுண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்வென்றிக் கொருமலை யெனவாழ் மலையேதவவாழ்வே

விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்கஞ்சத் தயனுட னமரே சனுமேவிந்தைப் பணிவிடை புரிபோ தவர்மேலருள்கூர்வாய்

தொந்திக் கணபதி மகிழ்சோ தரனேசெங்கட் கருமுகில் மருகா குகனேசொந்தக் குறமகள் கணவா திறல்சேர்கதிர்காமா

சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்இஞ்சித் திருமகள் புடைசூ ழருள்சேர்துங்கப் பழநியில் முருகா இமையோர்பெருமாளே.

All songs →