Song 138
கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தத்த தான தனதனன தத்த தானதனதனன தத்த தானதனதான
Lyrics
கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாயகபிலர்பக ரக்க ணாதர்உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்த ரோடுகலகலென மிக்க நூல்களதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதிதெரிவரிய சித்தி யானவுபதேசந்
தெரிதர விளக்கி ஞான தரிசந மளித்து வீறுதிருவடி யெனக்கு நேர்வதொருநாளே
கெலையுற எதிர்த்த கோர இபமுக அரக்க னோடுகுரகத முகத்தர் சீயமுகவீரர்
குறையுட லெடுத்து வீசி யலகையொடு பத்ர காளிகுலவியிட வெற்றி வேலைவிடுவோனே
பலமிகு புனத்து லாவு குறவநிதை சித்ர பாரபரிமள தனத்தில் மேவுமணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறுபழநிமலை யுற்ற தேவர்பெருமாளே.
