Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1326

ஓருரு வாகிய தாரகப் பிரமத்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதி(எடுப்பு 3/4 இடம்)

Lyrics

ஓருரு வாகிய தாரகப் பிரமத்தொருவகைத் தோற்றத் திருமர பெய்திஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை

இருபிறப் பாளரினொருவ னாயினைஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்

நான்முகன் குடிமி இமைப்பினிற் பெயர்த்துமூவரும் போந்து இருதாள் வேண்டஒருசிறை விடுத்தனை

ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவிஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை

ஒருவகை வடிவினி லிருவகைத் தாகியமும்மதன் தனக்கு மூத்தோ னாகிநால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்அறுகு சூடிக் கிளையோ னாயினை

ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்துமுக்கட் சுடரினை இருவினை முருந்துக்கொருகுரு வாயினை

ஒருநாள் உ மையிரு முலைப்பா லருந்திமுத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனெனஎழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்டன்றி லங்கிரியிருபிள வாக ஒருவேல் விடுத்தனை

காவிரிவடகரை மேவிய குருகிரிஇருந்தஆறெழுத் தந்தணர் அடியிணை போற்றஏரகத் திறைவ னென இருந்தனையே.

All songs →