Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1314

கருவாகியெ தாயுத ரத்தினி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - திஸ்ரத்ரிபுடைதனனாதன தானன தத்தனதனனாதன தானன தத்தனதனனாதன தானன தத்தனதனதான

Lyrics

கருவாகியெ தாயுத ரத்தினிலுருவாகவெ கால்கையு றுப்பொடுகனிவாய்விழி நாசியு டற்செவிநரைமாதர்

கையிலேவிழ வேகிய ணைத்துயிலெனவேமிக மீதுது யிற்றியகருதாய்முலை யாரமு தத்தினிலினிதாகித்

தருதாரமு மாகிய சுற்றமுநலவாழ்வுநி லாதபொ ருட்பதிசதமாமிது தானென வுற்றுனைநினையாத

சதுராயுன தாளிணை யைத்தொழஅறியாதநிர் மூடனை நிற்புகழ்தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வதொருநாளே

செருவாயெதி ராமசு ரத்திரள்தநல்முளைக ளோடுநி ணத்தசைதிமிர்தாதுள பூதக ணத்தொடுவருபேய்கள்

திகுதாவுண வாயுதி ரத்தினைபலவாய்நரியோடுகு டித்திடசிலகூகைகள் தாமுந டித்திடஅடுதீரா

அருமாமறை யோர்கள்து தித்திடுபுகர்வாரண மாதுத னைத்திகழ்அளிசேர்குழல் மேவுகு றத்தியைஅணைவோனே

அழகானபொன் மேடையு யர்த்திடுமுகில்தாவிய சோலைவி யப்புறுஅலையாமலை மேவிய பத்தர்கள்பெருமாளே.

All songs →