Song 1268
மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனத் தனதன தனனத் தனதனதனனத் தனதனதனதான
Lyrics
மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர்மலையப் படவிடுவலியாலே
வனமுற் றினவளை யினநித் திலமலைவலையத் துகள்வளைகடலாலே
விதனப் படுமதி வதனக் கொடியறவெருவிப் பரிமளஅணைமீதே
மெலியக் கலைதலை குலையத் தகுமினிவிரையக் குரவலர்தரவேணும்
புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர்புனைவித் தவர்தொழுகழல்வீரா
பொருகைச் சரிவரிபெருகச் செறிவுறுபுனமெய்க் குறமகள்மணவாளா
முதுநற் சரவண மதனிற் சததளமுளரிப் பதிதனிலுறைவோனே
முதுமைக் கடலட ரசுரப் படைகெடமுடுகிப் பொரவலபெருமாளே.
