Song 1263
பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தனதன தனதனதானத் தனந்தம்தனதான
Lyrics
பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடுபேணிக் கரங்கொண்டிருகாலும்
பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதிபேதித் தளந்தம்புவியூடே
வரவிட வருமுட லெரியிடை புகுதருவாதைத் தரங்கம்பிறவாமுன்
மரகத மயில்மிசை வருமுரு கனுமெனவாழ்க்கைக் கொரன்புந்தருவாயே
அருவரை தொளைபட அலைகடல் சுவறிடஆலிப் புடன்சென்றசுரேசர்
அனைவரு மடிவுற அமர்பொரு தழகுடனாண்மைத் தனங்கொண்டெழும்வேலா
இருவினை யகலிட எழிலுமை யிடமுடையீசர்க் கிடுஞ்செந்தமிழ்வாயா
இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும்ஏழைக் கிரங்கும்பெருமாளே.
