Song 1246
தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- பிலஹரி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (5)(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1தனதனன தானனம் தனதனன தானனம்தனதனன தானனம்தனதான
Lyrics
தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந்தவறுதரு காமமுங்கனல்போலுந்
தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ்சமயவெகு ரூபமும்பிறிதேதும்
அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண்டறியுமொரு காரணந்தனைநாடா
ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்றபரிமித மாய்விளம்புவதோதான்
கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமுங்களபமொழி யாதகொங்கையுமாகிக்
கவருமவ தாரமுங் கொடியபரிதாபமுங்கருதியிது வேளையென்றுகிராத
குலதிலக மானுடன் கலவிபுரிவாய்பொருங்குலிசகர வாசவன்திருநாடு
குடிபுகநி சாசரன் பொடிபடம கீதரன்குலையநெடு வேல்விடும்பெருமாளே.
