Song 1237
கோக னகமு கிழ்த்த போக புளகி தத்த
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தனன தத்த தான தனன தத்ததான தனன தத்ததனதான
Lyrics
கோக னகமு கிழ்த்த போக புளகி தத்தகோடு தலைகு லைத்தமுலையாலே
கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்தநீடி யகுவ ளைக்கண்மடமானார்
ஆக முறவ ணைத்து காசை யபக ரித்துமீள விதழ்க டிப்பதறியாதே
ஆசை யதுகொ ளுத்து மால மதுகு டித்தசேலில் பரித விப்பதினியேனோ
மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்குசாவி யதுவோ ரர்த்தமொழிவோனே
வாகு வலைய சித்ர ஆறி ருபுய வெற்பில்வாழ்வு பெருகு றத்திமணவாளா
வேக வுரக ரத்ந நாக சயன சக்ரமேவி மரக தத்தின்மருகோனே
வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றிவேலை யுருவ விட்டபெருமாளே.
