Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1232

கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தய்யனா தத்ததன தய்யனா தத்ததனதய்யனா தத்ததனதனதான

Lyrics

கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரியகல்விவீ றக்கரியமனமாகுங்

கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசையமெய்கள்தோ ணிப்பிறவியலைவேலை

மெள்ள ஏறிக்குரவு வெள்ளிலார் வெட்சிதணமுல்லைவே ருற்பலமுளரிநீபம்

வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனதுசொல்லையோ திப்பணிவதொருநாளே

துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவுவள்ளிமா னுக்குமயல்மொழிவோனே

தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன்எல்லைகா ணற்கரியர்குருநாதா

தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள்செல்வனே முத்தமிணர்பெருவாழ்வே

தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவதெய்வயா னைக்கினியபெருமாளே.

All songs →