Song 1226
கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனந் தனதனன தனதனந் தனதனனதனதனந் தனதனனதனதான
Lyrics
கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலைகவரினுந் துவரதரமிருதோள்பைங்
கழையினுங் குழையுமென மொழிபழங் கிளவிபலகளவுகொண் டொருவர்மிசைகவிபாடி
அடலசஞ் சலனதுல னநுபமன் குணதரன்மெய்அருள்பரங் குரனபயனெனஆசித்
தலமரும் பிறவியினி யலமலம் பிறவியறஅருணபங் கயசரணமருள்வாயே
வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழிமகிதலம் புகவழியுமதுபோல
மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதிவழிவிடும் படிபெருகுமுதுபாகை
உ டையசங் க்ரமகவள தவளசிந் துரதிலகனுலகுமிந் திரனுநிலைபெறவேல்கொண்
டுததிவெந் தபயமிட மலையொடுங் கொலையவுணருடனுடன் றமர்பொருதபெருமாளே.
