Song 1220
இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- பூபாளம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (5)தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தனதனன தந்தனம் தனதனன தந்தனம்தனதனன தந்தனம்தந்ததான
Lyrics
இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண்கிணியிலகு தண்டையம்புண்டாணகம்
எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந்திரவுபகல் சந்ததஞ்சிந்தியாதோ
உ னதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின்றுளையுமொரு வஞ்சகன்பஞ்சபூத
உ டலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந்துழலுமது துன்புகண்டன்புறாதோ
கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங்கடவிகட குஞ்சரந்தங்கும்யானை
கடகசயி லம்பெறும் படியவுணர் துஞ்சமுன்கனககிரிசம்பெழுந்தம்புராசி
அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென்றரனுமுமை யும்புகழ்ந்தன்புகூர
அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின்றரிபிரமர் கும்பிடுந்தம்பிரானே.
