Song 1218
இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தான தானன, தனதன தான தானனதனதன தான தானனதனதான
Lyrics
இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலினிடமது லாவி மீள்வனநுதல்தாவி
இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலெனஎறிவன காள கூடமுமமுதாகக்
கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தருகலவியில் மூழ்கி வாடியதமியேனுங்
கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவைகசடற வேறு வேறுசெய்தருள்வாயே
ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவுமுததியில் வீழ வானரமுடனேசென்
றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர்உ ணருப தேச தேசிகவரையேனற்
பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகிபரிபுர பாத சேகரசுரராஜன்
பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகனபரவச ஞான யோகிகள்பெருமாளே.
