Song 1208
அரும்பி னாற்றனிக் கரும்பி னாற்றொடுத்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத்தனந்த தாத்தனத்தனதான
Lyrics
அரும்பி னாற்றனிக் கரும்பி னாற்றொடுத்தடர்ந்து மேற்றெறித்தமராடும்
அநங்க னார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத்தரம்பை மார்க்கடைக்கலமாகிக்
குரும்பை போற்பணைத் தரும்பு றாக்கொதித்தெழுந்து கூற்றெனக்கொலைசூழுங்
குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக்குணங்க ளாக்கிநற்கழல்சேராய்
பொருந்தி டார்ப்பரத் திலங்கை தீப்படக்குரங்கி னாற்படைத்தொருதேரிற்
புகுந்து நூற்றுவர்க் கொழிந்து பார்த்தனுக்கிரங்கி யாற்புறத்தலைமேவிப்
பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப்பிறங்க வேத்தியக்குறுமாசூர்
பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப்பிளந்த வேற்கரப்பெருமாளே.
