Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1195

மைக்குக்கைப் புக்கக் கயல்விழி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்தத்தத் தத்தத் தனதனதத்தத்தத் தத்தத் தனதனதத்தத்தத் தத்தத் தனதனதனதான

Lyrics

மைக்குக்கைப் புக்கக் கயல்விழியெற்றிக்கொட் டிட்டுச் சிலைமதன்வர்க்கத்தைக் கற்பித் திடுதிறமொழியாலே

மட்டிட்டுத் துட்டக் கெருவிதமிட்டிட்டுச் சுற்றிப் பரிமளமச்சப்பொற் கட்டிற் செறிமலரணைமீதே

புக்குக்கைக் கொக்கப் புகுமொருஅற்பச்சிற் றிற்பத் தெரிவையர்பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிறபுலையேனைப்

பொற்பித்துக் கற்பித் துனதடிஅர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெயபுத்திக்குச் சித்தித் தருளுவதொருநாளே

திக்குக்குத் திக்குத் திகுதிகுடுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடுதித்தித்தித் தித்தித் திதியெனநடமாடுஞ்

சித்தர்க்குச் சுத்தப் பரமநல்முத்தர்க்குச் சித்தக் க்ருபையுளசித்தர்க்குப் பத்தர்க் கருளியகுருநாதா

ஒக்கத்தக் கிட்டுத் திரியசுர்முட்டக்கொட் டற்றுத் திரிபுரமொக்கக்கெட் டிட்டுத் திகுதிகுவெனவேக

உ ற்பித்துக் கற்பித் தமரரைமுற்பட்டக் கட்டச் சிறைவிடுமொட்குக்டக் கொற்றக் கொடியுளபெருமாளே.

All songs →