Song 1188
மாண்டாரெ லும்பணி யுஞ்சடை
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- சங்கராபரணம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (6 1/2)தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2தாந்தான தந்தன தந்தனதாந்தான தந்தன தந்தனதாந்தான தந்தன தந்தனதனதான
Lyrics
மாண்டாரெ லும்பணி யுஞ்சடையாண்டாரிறைஞ்ச மொழிந்ததைவான்பூத லம்பவ னங்கனல்புனலான
வான்பூத முங்கர ணங்களுநான்போயொ டுங்கஅ டங்கலுமாய்ந்தால்வி ளங்கும தொன்றினையருளாயேல்
வேண்டாமை யொன்றைய டைந்துளமீண்டாறி நின்சர ணங்களில்வீழந்தாவல் கொண்டுரு கன்பினையுடையேனாய்
வேந்தாக டம்புபு னைந்தருள்சேந்தாச ரண்சர ணென்பதுவீண்போம தொன்றல என்பதையுணராதோ
ஆண்டார்த லங்கள ளந்திடநீண்டார்மு குந்தர்த டந்தனில்ஆண்டாவி துஞ்சிய தென்றுமுதலைவாயுற்
றாங்கோர்சி லம்புபு லம்பிடஞான்றுது துங்கச லஞ்சலம்ஆம்பூமு ழங்கிய டங்குமளவில்நேசம்
பூண்டாழி கொண்டுவ னங்களிலேய்ந்தாள வென்றுவெ றுந்தனிபோந்தோல மென்றுத வும்புயல்மருகோனே
பூம்பாளை யெங்கும ணங்கமழ்தேங்காவில் நின்றதொர் குன்றவர்பூந்தோகை கொங்கைவி ரும்பியபெருமாளே.
