Song 1186
மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- தோடி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - திஸ்ர ஏகம் (3)தனதானன தனதானன தனதானன தனதானனதனதானன தனதானனதனதான
Lyrics
மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்வடிவாயுடல் நடமாடுகமுடியாதேன்
மனமாயையொ டிருகாழ்வினை யற்முதுடை மலம்வேரறமகிழ்ஞானக அநுபூதியினருள்மேவிப்
பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெபரிபூரண கிருபாகரமுடன்ஞான
பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விடபலகோடிவெண் மதிபோலவெவருவாயே
சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழுசசிசூரியர் சுடராமெனவொருகோடிச்
சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுகசதிநாடக மருள்வேணியனருள்பாலா
விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகிவெகுமாலுற தனமேலணைமுருகோனே
வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடகவெயில்வீசிய அழகாதமிழ்பெருமாளே.
