Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1182

பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கிய

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தனதந்தந் தனன தாத்தனதனதான

Lyrics

பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கியபெங்கும் புதிய நேத்திரவலைவீசிப்

பொன்கண் டிளகு கூத்திகள் பூன்கண் கலவி வேட்டுயிர்பூண்கொண் டுருகி யாட்படுமயல்தீரக்

கொங்கின் புசக கோத்திரிபங்கங் களையு மாய்க்குடிகொங்கின் குவளை பூக்கிறகிரிசோண

குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றியகுன்றம் பிறவும் வாழ்த்துவதொருநாளே

எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி வீக்கியவெஞ்சண் டதனு வேட்டுவர்சரணார

விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவைமென்குங் குமகு யாத்திரிபிரியாதே

எங்குங் கலுமி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிடஎங்குங் குருவி யோச்சியதிருமானை

என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொடென்றும் பொழுது போக்கியபெருமாளே.

All songs →