Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1164

தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத்தனந்தத்தத் தனந்தத்தத்தனதான

Lyrics

தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற்சதங்கைக்கற் சிலம்பொத்திக்கையில்வீணை

ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற்சரஞ்சுற்றிட் டிணங்கக்கட்சரவேலால்

தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத்தினந்தெட்டிக் கடன்பற்றிக்கொளுமாதர்

சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச்சிவம்பெற்றுத் தவம்பற்றக்கழல்தாராய்

தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட்டடண்டட்டட் டிமிண்டுட்டுட்டியல்தாளந்

தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத்தகண்டத்தர்க் குடன்பட்டுற்றசுராரைச்

சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச்சிரந்தத்தப் பிளந்துட்கக்கிரிதூளாச்

செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச்செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப்பெருமாளே.

All songs →