Song 1158
சுற்றத் தவர்களு மக்களு மிதமுள
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தத் தனதன தத்தன தனதனதத்தத் தனதன தத்தன தனதனதத்தத் தனதன தத்தன தனதனதனதானத்
Lyrics
சுற்றத் தவர்களு மக்களு மிதமுளசொற்குற் றரிவையும் விட்டது சலமிதுசுத்தச் சலமினி சற்றிது கிடைபடுமெனமாழ்கித்
துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல்சுட்டக் குடமொடு சுட்டெரிகனலொடுதொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறைபிண்முடச்
சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல்சட்டப் படவுயிர் சற்றுடன் விசியதுதப்பிற் றவறுறு மத்திப நடையெனஉ ரையாடிச்
சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசைதப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழிதத்தச் சடம்விடு மப்பொழு திருசரணருள்வாயே
சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல்சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில்செற்கட் சிவகதி யுத்தமி களிதரமுதுபேய்கள்
திக்குச் செககெண தித்தரிதிகுதிகுசெச்செச் செணக்ருத டொட்டரிசெணக்ருதடெட்டெட் டுடுடுடு தத்தரிதரியெனநடமாடுங்
கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள்குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய்கொச்சைக் கணபதி முக்கண னிளையவகளமீதே
குப்புற் றுடனெழு சச்சரிமுழவியல்கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர்கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்தபெருமாளே.
