Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1153

குனகியொரு மயில்போல வாராம னோலீலை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தனதான தானான தானானதனதனன தனதான தானான தானானதனதனன தனதான தானான தானானதனதான

Lyrics

குனகியொரு மயில்போல வாராம னோலீலைவிளையவினை நினையாம லேயேகி மீளாதகொடியமன தநியாய மாபாத காபோதியெனஆசைக்

கொளுவ அதில் மயலாகி வீறொடு போய்நீளமலரமளி தனிலேறி யாமாறு போமாறுகுலவிநல மொழிகூறி வாரேறு பூணாரமுநல்முழ்கி

மனமுருக மதராஜ கோலாடு மாபூசல்விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீளமதிவதன மொளிவீச நீராள மாய்மேவியநுராக

வகைவகையி லதிமோக வாராழி யூடானபொருளளவ தளவாக யாரோடு மாலானவனிதையர்கள் வசமாய நாயேனு மீடேறஅருள்வாயே

எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதிலெனவிரகு குலையாத மாதாவு நேரோதஇசையுமொழி தவறாம லேயேகி மாமாதுமிளையோனும்

இனிமையொடு வருமாய மா஡ணச மானாவிகுலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாளஇறுகிநெடு மரமேழு தூளாக வேவாலியுயிர்சீறி

அநுமனொடு கவிகூட வாராக நீராழியடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவிஅவுணர்கிளை கெடநூறி யாலால மாகோபநிருதேசன்

அருணமணி திகழ்பார வீராக ராமோலியொருபதுமொர் கணைவீழ வேமோது போராளிஅடல்மருக குமரேச மேலாய வானோர்கள்பெருமாளே.

All songs →