Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1150

கலவியி னலமுரை யாமட வார்சந்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தனதன தானன தானந்தனத் தனந்தன தனன தான தனதனதானான தான தனனந் தானந்தனன தாத்தன தானத் தானத் தானத்தாத்தன தனதான

Lyrics

கலவியி னலமுரை யாமட வார்சந்தனத் தனங்களில் வசம தாகி யவரவர்பாதாதி கேச மளவும் பாடுங்கவிஞ னாய்த்திரிவேனைக் காமக் ரோதத்தூர்த்தனை யபராதக்

கபடனை வெகுபரிதாபனை நாளும்ப்ரமிக்கு நெஞ்சனை உ ருவ மாறி முறை முறைஆசார வீன சமயந் தோறுங்களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச்சாத்திர நெறிபோயைம்

புலன்வழி யொழுகிய மோகனை மூகந்தனிற் பிறந் தொரு நொடியின் மீள அழிதருமாதேச வாழ்வை நிலையென் றேயம்புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப்பூக்கழ லிணைசேரப்

பொறியிலி தனையதி பாவியை நீடுங்குணத் ரயங்களும் வரும நேக வினைகளுமாயா விகார முழுதுஞ் சாடும்பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக்காப்பது மொருநாளே

குலகிரிதருமபி ராம மயூரம்ப்ரியப் படும்படி குவளை வாச மலர்கொடுவாரா வுலாவி யுணரும் யோகங்குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப்பார்த்தரு ளியபார்வைக்

குரிசிலு மொருசுரர் பூசுர னோமென்றதற் கநந்தர மிரணி யாய நமவெனநாராய ணாய நமவென் றோதுங்குதலை வாய்ச்சிறி யோனுக் காகத் தூணிற்றோற்றிய வசபாணிப்

பலநக நுதியி னிசாசர னாகங்கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல்தோண்மாலை யாக அணியுங் கோவும்பரவி வாழ்த்திட வேகற்றாரச் சோதிப்பாற்பணி யிறைவாகைப்

படமுக வடலயி ராபத மேறும்ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெடவேலேவி வாவி மகரஞ் சீறும்பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோ டத்தாக்கிய பெருமாளே.

All songs →