Song 1146
ஓது வித்தவர் கூலிகொ டாதவர்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தத்தன தானன தானனதான தத்தன தானன தானனதான தத்தன தானன தானனதனதான
Lyrics
ஓது வித்தவர் கூலிகொ டாதவர்மாத வர்க்கதி பாதக மானவர்ஊச லிற்கன லாயெரிகாளையர்மறையோர்கள்
ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்ஆர்த னக்குமு தாசின தாரிகள்ஓடி யுத்தம ரூதிய நாடினரிரவோருக்
கேது மித்தனை தானமி டாதவர்பூத லத்தினி லோரம தானவர்ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமையிகழ்வோர்கள்
ஏக சித்ததி யானமி லாதவர்மோக முற்றிடு போகித மூறினர்ஈன ரித்தனை பேர்களு மேழ்நரகுழல்வாரே
தாத தத்தத தாதத தாதததூது துத்துது தூதுது தூதுதுசாச சச்சச சாசச சாசசசசசாச
தாட டட்டட டாடட டாடடடூடு டுட்டுடு டூடுடு டூடுடுதாடி டிட்டிடி டீடிடி டீடிடிடிடிடீடீ
தீதி தித்திதி தீதிதி தீதிதிதோதி குத்திகு தோதிகு தோதிகுசேகு செக்குகு சேகுகு சேகுகுசெகுசேகு
சேயெ னப்பல ராடிட மாகலைஆயு முத்தமர் கூறிடும் வாசகசேகு சித்திர மாக நிணாடியபெருமாளே.
