Song 1143
எட்டுட னொருதொளை வாயா யதுபசு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- த்விஜாவந்தி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதி - 2 களைதத்தன தனதன தானா தனதனதத்தன தனதன தானா தனதனதத்தன தனதன தானா தனதனதனதான
Lyrics
எட்டுட னொருதொளை வாயா யதுபசுமட்கல மிருவினை தோயா மிகுபிணியிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர்நிலையாக
எப்படி யுயர்கதி நாமே றுவதெனஎட்பகி ரினுமிது வோரார் தமதமதிச்சையி னிடருறு பேரா சைகொள்கடலதிலேவீழ்
முட்டர்க ணெறியினில் வீழா தடலொடுமுப்பதி னறுபதின் மேலா மறுவருமுற்றுத லறிவரு ஞானோ தயவொளிவெளியாக
முக்குண மதுகெட நானா வெனவருமுத்திரை யழிதர ஆரா வமுதனமுத்தமிழ் தெரிகனி வாயா லருளுவதொருநாளே
திட்டென எதிர்வரு மாகா ளியினொடுதிக்கிட தரிகிட தீதோ மெனவொருசித்திர வெகுவித வாதா டியபதமலராளன்
செப்புக வெனமுன மோதா துணர்வதுசிற்சுக பரவெளி யீதே யெனஅவர்தெக்ஷண செவிதனி லேபோ தனையருள்குருநாதா
மட்டற அமர்பொரு சூரா திபனுடல்பொட்டெழ முடுகிவை வேலா லெறிதருமற்புய மரகத மாதோ கையில்நடமிடுவோனே
வச்சிர கரதல வானோ ரதிபதிபொற்புறு கரிபரிதேரோ டழகுறவைத்திடு மருமக னேவா ழமரர்கள்பெருமாளே.
