Song 1135
இருமுலை மலையென ஒப்பிட் டேயவர்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தத்தத் தானனதனதன தனதன தத்தத் தானனதனதன தனதன தத்தத் தானனதனதான
Lyrics
இருமுலை மலையென ஒப்பிட் டேயவர்இருவிழி யதனில் கப்பட் டேமனமிசைபட வசனமு ரைத்திட் டேபலமினிதொடே
இடையது துவளகு லுக்கிக் காலணிபரிபுர வொலிகள் தொனிக்கப் பூதரஇளமுலை குழைய அணைத்துக் கேயுரமணியோடே
மதகத பவள மழுத்திப் பூஷணமணிபல சிதறி நெறித்துத் தானுகமருமலர் புனுகு தரித்துப் பூவணைமதராஜன்
மருவிய கலவி தனக்கொப் பாமெனமகிழ்வொடு ரசிது மிகுத்துக் கோதையைமருவியு முருகி களைத்துப் பூமியிலுழல்வேனோ
திரிபுர மெரிய நகைத்துக் காலனையுதைபட மதனை யழித்துச் சாகரதிரைவரு கடுவை மிடற்றிற் றானணிசிவனார்தந்
திருவருள் முருக பெருத்துப் பாரினில்சியொதனன் மடிய மிகுத்துப் பாரதசெயமுறு மரிதன் மனத்துக் காகியமருகோனே
நரிகழு வதுகள் களிக்கச் சோரிகள்ரணகள முழுதுமி குத்துக் கூளிகள்நடமிட அசுரர் குலத்துக் காலனைநிகராகி
நனிகடல் கதற பொருப்புத் தூளெழநணுகிய இமையவ ருக்குச் சீருறநணுகலர் மடியதொ லைத்துப் பேர்பேறுபெருமாளே.
