Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1130

இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனனந் தாத்த தான தத்ததனதனனந் தாத்த தான தத்ததனதனனந் தாத்த தான தத்ததனதான

Lyrics

இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்துவிடமுழுதுந் தேக்கி யேநி றைத்துஇருகுழையுந் தாக்கி மீள்க யற்கண்வலையாலே

இனிமையுடன் பார்த்து ளேய ழைத்துமுகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும்இருவரையுங் காட்டி மாலெ ழுப்பிவிலைபேசி

மடலவிழும் பூக்க ளால்நி றைத்தசுருளளகந் தூற்றி யேமு டித்துமறுகிடைநின் றார்க்க வேந கைத்துநிலையாக

வருபொருள்கண் டேற்க வேப றிக்கும்அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்கமனமுருகுந் தூர்த்த னாயி ளைத்துவிடலாமோ

படிமுழுதுங் கூர்த்த மாகு லத்திமுதுமறையின் பேச்சி நூலி டைச்சிபகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சியிருநாழி

படிகொடறங் காத்த மாப ரைச்சிமணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சிபலதிசையும் போய்க்கு லாவி ருப்பிநெடுநீலி

அடுபுலியின் தோற்ப டாமு டைச்சிசமரமுகங் காட்டு மால்வி டைச்சிஅகிலமுமுண் டார்க்கு நேரிளைச்சிபெருவாழ்வே

அரியயனின் றேத்த வேமி குத்தவிபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்தஅசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்தபெருமாளே.

All songs →