Song 1127
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- கீரவாணி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - திஸ்ர த்ருபுடை (7)தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்ததானாதன தானந் தனத்ததனதான
Lyrics
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்துமாவாகன மாமந் திரத்துமடலாலும்
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்துமாமாறெரிதாமிந் தனத்துமருளாதே
நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்தநீநானற வேறின்றி நிற்கநியமாக
நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்திநேரேபர மாநந்த முத்திதரவேணும்
வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்கவேதாளச மூகம் பிழைக்கஅமராடி
வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்கவேர்மாமர மூலந் தறித்துவடவாலும்
வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்துவாணாசன மேலுந் துணித்தகதிர்வேலா
வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்துவானோர்பரிதாபந் தவிர்த்தபெருமாளே.
