Song 1111
நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தந்தான தானதன தந்தானதானதன தந்தானதனதான
Lyrics
நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடிநீளமக லஞ்சோதிவடிவான
நேசமல ரும்பூவை மாதின்மண மும்போலநேர்மருவி யுண்காதலுடன்மேவிச்
சூரியனு டன்சோம னீழலிவை யண்டாதசோதிமரு வும்பூமியவையூடே
தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாடசோதிஅயி லுந்தாருமருள்வாயே
வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்வாய்விடவொ டெண்பாலுமுடுபோல
வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாடமாமயில்வி டுஞ்சேவல்கொடியோனே
ஆரியன வன்தாதை தேடியின மும்பாடுமாடலரு ணஞ்சோதியருள்பாலா
ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காதலாசைமரு வுஞ்சோதிபெருமாளே.
