Song 1104
காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானனா தந்தனந் தானனா தந்தனந்தானனா தந்தனந்தனதான
Lyrics
காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்காரநா கஞ்செழுங்கனிவாய்கண்
காளகூ டங்கொடுங் கால்ரு பம்பொருங்காமபா ணஞ்சுரும்பினம்வாழும்
ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந்தோநமோ கந்தஎன்றுரையாதே
ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின்றோயுமா றொன்றையுங்கருதாதோ
தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந்தாரம்வா சந்திசந்தனநீடு
சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந்தானமா தெங்கள்பைம்புனமேவும்
தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ்சேகரா தண்டையங்கழல்பேணித்
தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந்தேசிகா வும்பர்தம்பெருமாளே.
