Song 1096
விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தனதனன தனதனன தனதனனதனதனன தனதனனதனதான
Lyrics
விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதறவிதறிவளை கலகலெனஅநுராகம்
விளையம்ருக மதமகுள முலைபுளக மெழநுதலில்வியர்வுவர அணிசிதறமதுமாலை
அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதியிதழ்பருகி யுருகியரிவையரோடே
அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகியவசமுறு கினுமடிகள்மறவேனே
உ டலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிரவுரகர்பில முடியவொருபதமோடி
உ ருவமுது ககனமுக டிடியமதி முடிபெயரவுயரவகி லபுவனமதிரவீசிக்
கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ்கருதரிய விதமொடழகுடனாடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரககடகமுட னமர்பொருதபெருமாளே.
