Song 1091
அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனதன தனனதன தனனதன தனனதனதனனதன தனனதனதனதான
Lyrics
அளகநிரை குலையவிழி குவியவளை கலகலெனஅமுதமொழி பதறியெழஅணியாரம்
அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிகஅமுதநிலை யதுபரவஅதிமோகம்
உ ளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனுமுறுகபட மதனில்மதியழியாதே
உ லகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமுனுபயநறு மலரடியைஅருள்வாயே
வளையமலை கடல்சுவற விடுபகழி வரதனிருமருதினொடு பொருதருளுமபிராமன்
வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன்மருகஅமர் முடுகிவருநிருதேசர்
தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதறதகனமெழ முடுகவிடுவடிவேலா
தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவசகலகலை முழுதும்வலபெருமாளே.
