Song 1089
இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தாத்த தனதனன தாத்ததனதனன தாத்ததனதான
Lyrics
இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டையெடுமெடென வீட்டிலனைவோரும்
இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில்எரியஎரிமூட்டியிடுமாறு
கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர்கயிறிறுக மாட்டியழையாமுன்
கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டுகழலிணைகள் காட்டியருள்வாயே
பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டுபழையகுற வாட்டிமணவாளா
பகைஞர்படை வீட்டில் முதியகன லுட்டுபகருநுதல் நாட்டகுமரேசா
அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டைஅடைவடைவு கேட்டமுருகோனே
அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டிஅமரர்சிறை மீட்டபெருமாளே.
