Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 108

அரிசன வாடைச் சேர்வை குளித்துப்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தானத் தான தனத்தத்தனதன தானத் தான தனத்தத்தனதன தானத் தான தனத்தத்தனதான

Lyrics

அரிசன வாடைச் சேர்வை குளித்துப்பலவித கோலச் சேலை யுடுத்திட்டலர்குழ லோதிக் கோதி முடித்துச்சுருளோடே

அமர்பொரு காதுக் கோலை திருத்தித்திருநுதல் நீவிப் பாளித பொட்டிட்டகில்புழு காரச் சேறு தனத்திட்டலர்வேளின்

சுரத விநோதப் பார்வைமை யிட்டுத்தருணக லாரத் தோடைத ரித்துத்தொழிலிடு தோளுக் கேறவ ரித்திட்டிளைஞோர்மார்

துறவினர் சோரச் சோரந கைத்துப்பொருள்கவர் மாதர்க் காசைய ளித்தற்றுயரற வேபொற் பாதமெ னக்குத்தருவாயே

கிரியலை வாரிச் சூரரி ரத்தப்புணரியின் மூழ்கிக் கூளிக ளிக்கக்கிரணவை வேல்புத் தேளிர்பி ழைக்கத்தொடுவோனே

கெருவித கோலப் பாரத னத்துக்குறமகள் பாதச் சேகர சொர்க்கக்கிளிதெய்வ யானைக் கேபுய வெற்பைத்தருவோனே

பரிமள நீபத் தாரொடு வெட்சித்தொடைபுனை சேவற் கேதன துத்திப்பணியகல் பீடத் தோகைம யிற்பொற்பரியோனே

பனிமல ரோடைச் சேலுக ளித்துக்ககனம ளாவிப் போய்வரு வெற்றிப்பழநியில் வாழ்பொற் கோமள சத்திப்பெருமாளே.

All songs →