Song 1079
சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தத்தத் தத்தத்தாந்தாந்தனதான
Lyrics
சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்சூழ்ந்தோங்கிடுபாரிற்
றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச்சோர்ந்தோய்ந்திடநாறுங்
கடுகென எடுமெனு டற்பற் றற்றுக்கான்போந்துறவோருங்
கனலிடை விதியிடு தத்துக் கத்தைக்காய்ந்தாண்டருளாயோ
தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்தாந்தோய்ந்திருபாலும்
தமருக வொலிசவு தத்திற் றத்தத்தாழ்ந்தூர்ந்திடநாகம்
படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப்பாய்ந்தாய்ந்துயர்கானம்
பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப்பாங்காம்பெருமாளே.
