Song 1072
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ...... முறுகேளும்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- வஸந்தா
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சதுஸ்ர அட (12)தனந்த தானந் தந்தன தனதனதனதான
Lyrics
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவருமுறுகேளும்
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும்வளமேவும்
விரிந்த நாடுங் குன்றமு நிலையெனமகிழாதே
விளங்கு தீபங் கொண்டுனை வழிபடஅருள்வாயே
குருந்தி லேருங் கொண்டலின் வடிவினன்மருகோனே
குரங்கு லாவுங் குன்றுறை குறமகள்மணவாளா
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதருபுலவோனெ
சிவந்த காலுந் தண்டையு மழகியபெருமாளே.
