Song 1055
சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தனதனன தனன தாத்தனதனதான
Lyrics
சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசிதணிகை பொருடி ராப்பகல்தடுமாறுஞ்
சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடுசரண கமல மேத்தியவழிபாடுற்
றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொரறிவின் வடிவ மாய்ப்புளகிதமாகி
அவச கவச மூச்சற அமரு மமலர் மேற்சிலரதிப திவிடு பூக்கணைபடுமோதான்
விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழமிடையு மலகில் தேர்ப்படையொடுசூழும்
விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர்விசைய னொருவ னாற்படவொருதூது
திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதிசிறுவ தறுகண் வேட்டுவர்கொடிகோவே
திமிர யுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடுசிகரிதகர வீக்கியபெருமாளே.
