Song 1049
சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
Lyrics
சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாதுதுரிய மீது சாராதுஎவராலுந்
தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாதசுகம கோத தீயாகியொழியாது
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாதுபவனம் வீசில் வீழாதுசலியாது
பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாதுபரம ஞான வீடேதுபுகல்வாயே
நிருதர் பூமி பாழாக மகர பூமி தநமுளநிபிட தாரு காபூமிகுடியேற
நிகர பார நீகார சிகர மீது வேலேவுநிருப வேத ஆசாரியனுமாலும்
கருது மாக மாசாரிகனக கார்மு காசாரிககன சாரிபூசாரிவெகுசாரி
கயிலை நாட காசாரிசகல சாரிவாழ்வானகருணை மேரு வேதேவர்பெருமாளே.
